News Just In

10/28/2020 07:32:00 AM

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து- சாரதி பலி!!


அச்சுவேலி – இராசபாதை வீதியில் கட்டுப்பாட்டையிழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அச்சுவேலி குட்டியபுலத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மாருதி சுவிட் கார் சுமார் 50 மீற்றர் இழுத்துச் சென்று மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டது. இதன் போது மின்கம்பம் உடைந்து கார் மேல் வீழ்ந்துள்ளது.

சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அம்புலன்ஸில் அச்சுவேலி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





No comments: