News Just In

10/28/2020 12:11:00 PM

உயர் தரப்பரீட்சை கண்காணிப்பாளராக செயற்பட்ட ஆசிரியைக்கு கொரோனா- மாணவர்கள் தனிமைப்படுத்தலில்


கம்பஹா மாவட்டத்தில் உயர் தரப்பரீட்சை கண்காணிப்பாளராக செயற்பட்ட ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியை, கம்பஹா நகர் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில், கடமையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த ஆசிரியை கடமையாற்றிய பரீட்சை மண்டபத்தில் சுமார் 40 மாணவர்கள் வரை இருந்துள்ள நிலையில். அவர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஆசிரியை பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

No comments: