News Just In

10/28/2020 06:48:00 PM

வெளியுறவுக் கொள்கையில் இலங்கை நடுநிலைத் தன்மையையே பேணி வருகின்றது- ஜனாதிபதி!!


வெளியுறவுக் கொள்கையில் இலங்கை நடுநிலைத் தன்மையையே பேணி வருவதாகவும் இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை தொடர்பில் வெளிநாடுகளுடன் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், போருக்குப் பின்னரான காலப்பகுதியில் நாட்டின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதில் சீனா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

எனினும், இதன் விளைவாக இலங்கை கடன் பொறிக்குள் இலங்கை சிக்கிக் கொள்ளாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான உதவிகளை எவ்வித தயக்கமுமின்றி வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த சந்திப்பின்போது, அபிவிருத்தி, முதலீடு மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் இருதரப்பினரால் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: