News Just In

10/28/2020 08:37:00 AM

நேற்று மாத்திரம் 457 பேருக்கு கொரோனா- 19 வயது நோயாளர் உள்ளிட்ட 3பேர் பலி- மொத்த எண்ணிக்கை 8870 ஆக உயர்வு!!


இலங்கையில் நேற்றைய தினம் 457 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

நேற்று மாலை 293 கொவிட்19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இரவில் 164 பேருக்கு தொற்றுறுதியானது.

அவர்களில் 447 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

10 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பேலியகொடை மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஆகிய கொரோனா கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தற்போது நாடு முழுவதிலும் கொவிட் 19 நோய்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 870 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கொவிட்-19 பரவல் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் நேற்று முன்தினம் 116 ஆவது இடத்தில் பதிவாகியிருந்த இலங்கை, நேற்றைய தினம் 114 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் நேற்றையதினம் 110 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 4 ஆயிரத்து 43 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்திருக்கின்றனர்.

4 ஆயிரத்து 808 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

No comments: