News Just In

10/30/2020 08:08:00 AM

மட்டக்களப்பில் சற்று முன்னர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 33ஆக உயர்வு!!


மட்டக்களப்பில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோறளைப்பற்று மத்தியில் வாழைச்சேனை போலீஸ் பிரிவில் ஒருவருக்கும், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மாவடிமுன்மாரியை சேர்ந்த நபர் கொழும்பில் இருந்து வந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர் என்பதோடு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு கோட்டுக் கொண்டுள்ளார்

No comments: