News Just In

10/27/2020 03:13:00 PM

சற்று முன்னர் மேலும் இருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு- 19ஆவது மரணம் பதிவாகியது!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

19 மற்றும் 75 வயதுடைய ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இருவரும் கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 19ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: