இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவையினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் சிறிய கைத்தொழில் அபிவிருத்திப் பிரிவும் ஒன்றிணைந்து 3 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா முதலீட்டு சுயசக்தி கடன் யோசனைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய, வர்த்தக வங்கிகள் ஊடாக குறித்த கடன் யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், முன்னேற்றகரமான திட்ட யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கடன் வழங்கப்பட்டது.
இதன்படி, குறித்த கடன் திட்டத்தின் மூலம் இதுவரை 13 ஆயிரத்து 890 தொழில் முயற்சியாளர்களுக்கு 3 ஆயிரத்து 64 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு 18 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகபட்ச கடன் வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments: