News Just In

7/04/2020 10:13:00 AM

மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் ஒன்றிணைந்த பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உத்தோயோக பூர்வமாக இன்று (04.07.2020) ஒன்றிணைந்த பிரச்சார நடவடிக்கையினை ஆரம்பித்தனர். 

மட்டக்களப்பு-கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்து சுவாமிஜி அவர்களின் ஆசீர்வாதத்துடன் சம்பிரதாயபூர்வமாக பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பிரச்சார நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், நடராஜா, மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம், வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர் தீபாகரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்து ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் இந்த பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.














No comments: