கொத்மலை பகுதியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாட்டில் கொரேனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு போதும் முடியாது. கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் எவ்வாறான அச்சநிலைமைய ஏற்படுத்தினாலும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது.
பொதுமக்கள் பாதுகாப்பை விட பொதுத் தேர்தலை நடாத்தில் நாடாளுமன்றில் முன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் ஒரேதேவையாக உள்ளது.
ஆனால் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. நாட்டில் எமது ஆட்சி ஏற்படுத்தப்படுமாயின் 24 மணிநேரத்திற்குள் எண்ணெய் விலை குறைக்கப்படும்.
பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் வரை எமது ஆட்சியில் மாதமொன்றில் ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: