News Just In

7/15/2020 09:38:00 PM

மஞ்சள் தூளுடன், கோதுமை மா கலப்பு; நுகர்வோர் சேவை அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்பு!!


இலங்கையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளுடன், கோதுமை மா கலக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய, நுகர்வோர் சேவை அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சந்தையிள் மஞ்சள் தூளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால், அதன் விலையும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் மஞ்சள் தூள் ஆயிரம் ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

நுகர்வோர் சேவை அதிகாரிகளினால், மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கு 750 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளபோதும், அதனை விடவும் அதிக விலைக்கு மஞ்சள்தூள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தையில் மஞ்சள் தூளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் மஞ்சள் தூளை பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் ஒன்று கொழும்பு - புறக்கோட்டை பகுதியில், நுகர்வோர் சேவை அதிகாரிகளினால் இன்று சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது, ஆயிரம் கிலோகிராம் மஞ்சள் தூளும், 300 கிலோகிராம் கட்டி மஞ்சளும் மீட்கப்பட்டதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments: