News Just In

7/15/2020 08:19:00 PM

மட்டக்களப்பு- நரிப்புல்தோட்டத்தில் அக்னிச் சிறகுகள் சமூகசேவை அமைப்பின் ஏற்பாட்டில் தேவைப்பாடுடைய குடும்பத்திற்கு மலசலகூடம் கையளிப்பு!


அக்னிச் சிறகுகள் சமுகசேவை பேரவை வேண்டுகோளுக்கு இணங்க சுவிற்ஸலாந்த் ஜெனீவாவில் இருக்கின்ற கிஷாந்த் தபராசா அவர்களின் Foundation for Economic and Education Development ( FEED ) நிதியுதவியுடன் மட்டக்களப்பு மண்முனை மேற்கு நரிப்புல்தோட்டம் எனும் கிராமத்தில் தேவைப்பாடுடைய குடும்பத்திற்கு மலசலகூடம் ஒன்று அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

இவ் மலசலகூடம் அமைக்கும் பணியானது 01/07/2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடைந்துள்ள நிலையில் திங்கள் கிழமை (13/07/2020) Foundation for Economic and Education Development ( FEED ) நிறுவனத்தினராலும், அக்னிச் சிறகுகள் சமுகசேவை பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் ஜெயக்கொடி, கிஷாந்த் தபராசா அவர்களின் தந்தையாரான செல்லத்துரை தபராசா(slps,jp)சமுக ஆர்வலர் சிவா ஆகியோராலும் கையளிக்கப்பட்டது.

இதற்கு உதவிய FEED foundation கிஷாந்த் தபராசா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும்,பாராட்டுக்களையும் அக்னிச் சிறகுகள் பேரவை சார்பாக தெரிவித்துக் கொள்கின்றது.








அக்னிச் சிறகுகள் பேரவை, 
நாவற்காடு,
மட்டக்களப்பு.

No comments: