மட்டக்களப்பு, கல்லடி பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் முன்னால் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா வானத்திலிருந்து 48,000 ரூபாய் பணம், காசோலைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின்போது குறித்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகிலும் முன்னாலும் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன், சந்தேநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments: