முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற போரின்போது 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாக கருணா தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த பணிப்புரைக்கமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கருணா அம்மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதற்கமைய அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: