News Just In

6/21/2020 12:15:00 PM

மின்சார கட்டணம் தொடர்பாக சற்றுமுன் வெளியான செய்தி


மின்சாரக் கட்டணங்களில் முரண்பாடுகள் காணப்படுமாயின் முறையிடுமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

நாட்டில் நிலவிய கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 ஆம் திகதி முதல் மின்சார பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நாடு தற்போது வழமைக்கு திரும்புகின்றமையை அடுத்து மின்சார பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மின்சார கட்டணம் பாரியளவு அதிகரித்துள்ளதாக மின்சார பயனாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் எமது செய்தி பிரிவு மின்சக்தி அமைச்சை தொடர்பு கொண்டு வினவியது.

குறித்த காலப்பகுதியில் அதிகளவான மக்கள் வீடுகளில் தங்கியிருந்தமையினால் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயரத்ன தெரிவித்தார்.

அத்துடன் மின்சார கட்டணம் செலுத்தும் அமைப்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் முறையிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

No comments: