News Just In

5/02/2020 06:33:00 PM

வாழைச்சேனையில் பொலிஸாரிடம் பிடிபட்ட நபர்கள்


எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலவேளையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினரினருக்கு கிடைத்த தகவலுக்கமைய வாகனேரி, பொண்டுகள்சேனை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலவேளையில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மணல் ஏற்றி வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.





No comments: