ஜா-எல பகுதியை சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது கடந்த மார்ச் மாதம் உருதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் ஒரு மாதகாலம் வரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி குணமடைந்து வீடு திரும்பினார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குணமடைந்து வீடு திரும்பிய அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 30ஆம் திகதி குறித்த நபர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
அmங்கு இவருக்கு பீ.சி.ஆர் பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது குறித்த நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உருதிப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொற்றாளர் சிருநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: