News Just In

5/27/2020 05:31:00 PM

கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நான்கு மாணவிகள் 9A சித்தி

மட்டக்களப்பு, கல்லடி-உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற நான்கு மாணவிகள் இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

கல்லடி உப்போடை பிரதேசத்தினை சேர்ந்த விஜயகுமாரன் திலோத்தி, கல்லடி வேலூரைச் சேர்ந்த லக்சா, நொச்சிமுனை பிரதேசத்தினை சேர்ந்த மனோகரன் கேஷ்மிகா மற்றும் செட்டிபாளையம் கிராமத்தினைச் சேர்ந்த கந்தசாமி கோவதர்னா  ஆகிய மாணவிகளே 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த வருடங்களைவிட இம்முறை பெறுபேறுகளில் கூடிய மாணவிகள் 9A  சித்திகளைப் பெற்றுள்ளதுடன்,  அதிகளவான மாணவிகள் உயர்தரத்திற்கு தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பெறுபேறுகள் தொடர்பாக பாடசாலை அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் சிறந்த பெறுபேறுகளை பெற வழிவகுத்த ஆசிரியர்கள் பாடசாலையினை முன்பு வழிநடத்திய அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டதுடன்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும் கூறியதுடன், வருகின்ற சாதாரணதரப் பரீட்சையில் இதை விட அதிகளவான மாணவர்கள் 9A  சித்திகளை பெறுவர் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.








No comments: