(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
'செந்தேவதை – Red Angel (றெட் ஏஞ்சல்) என அழைக்கப்படும் ஒரு வகை மாதுளம்பழச் செய்கை ஏறாவூரில் வெற்றியளித்திருப்பதாக ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவு விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
ஏறாவூர் சத்தாம் ஹூஸைன் கிராமத்தைச் சேர்ந்த அல்லாபிச்சை ஹக்கீம் என்பவரின் தோட்டத்தில் பரீட்சார்த்தமாக செய்கை பண்ணப்பட்ட இந்த வகை மாதுளைச் செய்கையின் அறுவடை நிகழ்வு செவ்வாய்க்கிழமை 26.05.2020 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு விவசாய பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, வடமாகாண விவசாய நவீன திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் கே.பத்மநாதன், ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவு விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன், விவசாயப் பயிலுநர் ஜே.ஜெனிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு புதிய வகை செந்தேவதை மாதுளம் பழச் செய்கை பற்றி மேலும் தெரிவித்த விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன், இந்திய மாதுளம் பழங்களின் இனமான இது விதையற்றதும் செந்நிறமானதுமாகும். இவ்வினம் கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக ஏறாவூரில் பரீட்சார்த்த செய்கைக்குட்படுத்தப்பட்டது.
இந்த மாதுளை இனம் நடுகை செய்யப்பட்டு சுமார் 9 மாதங்களில் பூக்கத் துவங்கி ஒரு வருட காலத்திற்குள் கனிகளைத் தரும். அதனைத் தொடர்ந்து சதாகாலமும் கனிகளைத் தரக் கூடிய வீரியம் கொண்டதாக இந்த மாதுளை இனம் சிறப்புப் பெற்றுள்ளது.
சாதாரணமாக இந்த வகை மாதுளம்பழத்தின் தற்போதைய சந்தை விலை 350 தொடக்கம் 400 ரூபாவாக உள்ளது. அதேவேளை ஒரு கனி 300 கிராம் தொடக்கம் 400 கிராம் வரை எடை கொண்டதாக விளைகிறது.
ஆரோக்கிய போஷணை நலன்கள் கொண்டதாக அமைந்துள்ள இந்த வகை மாதுளை இனம் பொருளாதார வருமானத்தையும் ஈட்டித் தரக்கூடியது' என்றார்.
5/27/2020 08:15:00 PM
Home
/
உள்ளூர்
/
ஏறாவூர்
/
மட்டக்களப்பு
/
செந்தேவதை-Red Angel மாதுளம்பழச் செய்கை ஏறாவூரில் வெற்றியளிப்பு!!
செந்தேவதை-Red Angel மாதுளம்பழச் செய்கை ஏறாவூரில் வெற்றியளிப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)









No comments: