News Just In

4/17/2020 08:05:00 PM

கொரோனா தடுக்கும் மனித நேயத்துக்கு மட்டக்களப்பில் பாராட்டி பதாதை காட்சிப்படுத்தப்பட்டது


(மட்டக்களப்பு மொஹமட் தஸ்-ரீப்)

கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு மனித நேயத்துக்கு பாடுபட்ட ஜனாதிபதி கோட்ட பாய ராஜபக்ஸ மற்றும் வைத்தியநிபுணர்கள் ,தாதியர்கள் ,மருத்துவப் பணிப் பாளர்கள் ,மற்றும் மாவட்டநிருவாகிகளுக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்தவவாழ்வு சமூகம் பாராட்டு தெரிவித்து மட்டக்களப்பு நகரின் பலஇடங்களில் பாராட்டு பதாகை களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு மனித நேயத்துக்கு பாடுபடும் முப்படையினர் பொலிஸ் அதிகாரிகள்,தன்னார்வ நிறுவனங்கலின் தொண்டர்களுக்கும் இணைத்தே இந்த பாராட்டு இப்பதாகையில் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மறைமாவட்ட கிறிஸ்தவவாழ்வு சமூகத்தின்ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை போல் சற்குணநாயகம்த்தின் தலைமையில் செயல்படும் ஆன்மீகக்குழுவினர் இந்த பாராட்டு பதாகைகளை இன்று 16 நகரின் பல இடங்களில் இந்த பாராட்டு பதாகைகளை காட்சிப் படுத் தும் செயல் பாட்டில் ஈடுபாடுகாட்டினர்.



No comments: