News Just In

4/17/2020 08:23:00 PM

கிராம சேவக உத்தியோகத்தர்கள் மீண்டும் தங்களது பணியில் ஈடுபடவுள்ளனர்


நாட்டில் உள்ள கூலி தொழிலாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் இருந்து விலகிகொள்ள இலங்கை கிராம சேவக உத்தியோகத்தர்களின் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கிராம சேவக உத்தியோகத்தர்கள் நாளை முதல் தங்களது சேவைகளை ஆரம்பிக்க உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

No comments: