இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாலை 4.30 வரையில் கொரோனா தொற்றினால் புதிதாக எந்தவொரு நபரும் கண்டறியப்படாத நிலையில் சற்று முன்னர் மூவர் கண்டறியப்பட்டுள்ளனர்.
புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 3 பெண்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 7 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: