-எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ஜனாதிபதி கோடபாய ராஜபக்ஷவின் சிந்தனையில் உதித்த 'சஹன பியவர' சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூதின் வழிகாட்டலில் சமுர்த்தி வங்கியினால் வீடு வீடாகச் சென்று வட்டியில்லாக் கடன் வழங்கல் நிகழ்வு இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி சமுர்த்தி வங்கியினால் ஓட்டமாவடி முதலாம் வட்டாரம், ஓட்டமாவடி 02ம் வட்டாரம் மற்றும் மாஞ்சோலை கிராமசேவகர் பிரிவு மக்களுக்கு கடன் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் எம்.எல்.அப்துல் மஜீத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் கலந்து கொண்டு சமுர்த்தி முற்பணக் கொடுப்பனவினை வீடு வீடாக சென்று வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.டி.எம். ருமைஸ், வங்கி முகாமையாளர் டி.எம். சிஹான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.பி.எம். அப்பாஸ் ஏ.கே.எம். சர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது பத்தாயிரம் ரூபா 'சஹன பியவர' சமுர்த்தி முற்பணக் கடன் திட்டத்தில் முதற்கட்டமாக ஐயாயிரம் ரூபா இருநூறு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
4/01/2020 10:30:00 AM
Home
/
உள்ளூர்
/
ஓட்டமாவடி
/
மட்டக்களப்பு
/
ஓட்டமாவடியில் "சஹன பியவர" சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கிவைப்பு
ஓட்டமாவடியில் "சஹன பியவர" சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கிவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)







No comments: