News Just In

4/01/2020 10:48:00 AM

சிறைச்சாலை பேருந்து விபத்து – ஆறு பொலிஸார் காயம்!


நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி சென்ற சிறைச்சாலை பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தமையினாநேற்றுல் (செவ்வாய்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பூங்கா பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் 6 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: