News Just In

4/17/2020 03:48:00 PM

மீண்டும் வழமைக்கு திரும்பியது மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையம்


தபால் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ள கடிதங்கள் மற்றும் பொதிகளை வகைபிரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

3 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகைபிரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தபால் மா அதிபர் தெரிவித்தார்.

கடிதங்கள் வகைபிரிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் கடிதங்கள் மற்றும் பொதிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, மருந்துப் பொருட்களை வீட்டிற்கே விநியோகிக்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

No comments: