News Just In

4/17/2020 04:02:00 PM

புகைப்பிடிப்போருக்கான எச்சரிக்கை!!


சாதாரணமானவர்களுடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு 14 மடங்கு அதிகம் என்றும் துருக்கியின் போதைப்பொருள் தடுப்பு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

துருக்கிய போதைப்பொருள் தடுப்பு குழுவின் தலைவரான பேராசிரியர் மொகாஹித் ஓஸ்டுர்க், வியாழக்கிழமை புகைபிடிப்பவர்கள் தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

புகையிலை மற்றும் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது கொரோனா வைரஸ் தொற்றும் அபாயத்தை அதிகரிக்கிறது.

எனவே அனைத்து போதைப்பொருள் பாவனையும் தவிர்ப்பது வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கிய பங்கினை வழங்கின்றது.

அடிக்கடி புகைபிடிப்பதானால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதுடன், அது கொரோனா வைரஸ் சிகிச்சையில் நேர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றது.

ஆதலால் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் இது சிகிச்சை முறையை தாமதப்படுத்துகிறது மற்றும் தொற்றுநோய்களின் போது சிகிச்சையை கடினமாக்குகிறது.

மேலும் புகைப்பிடித்தல் நுழையீரலுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் காற்றுப்பாதைகள் மற்றும் நுரையீரலில் ஒட்டக்கூடும், இது கடுமையான தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்றார்.

இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனம் இது தொடர்பில் கூறுகையில்,

புகைப்பிடிப்பவர்கள் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் விரல்கள் உதடுகளுடன் தொடர்பு கொள்கின்றன. இதன் மூலம் வைரஸ் உட்புக வாய்ப்பு அதிமாகவுள்ளதாக கூறியுள்ளது.

மேலும் வயதானவர்களை விட கொரோனாவினால் புகைப்பிடிப்பவர்கள் அதிகளவு உயிரிழக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹானில் பரவிய கொரோனா தொற்று இதுவரை 185 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் உயிரிழப்பு எண்ணிக்கை 145,568 ஆகவும், குணம‍டைந்தவர்களின் எண்ணிக்‍கை 517,000 யும் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: