இஸ்லாமிய தேசத்தை இலங்கையில் உருவாக்கும் நான்கு திட்டங்களுடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயற்படுவதாக முன்னாள் நீதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் உயிர்த்த ஞாயிறு தொடர்பாக சாட்சியமளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹலால் சான்றிதழ்,முகத்திரை,ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் அரபு மொழி கற்பித்தல் என்பவற்றினூடாக இங்கு இஸ்லாமிய தேசம் உருவாக்க உலமா சபை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர்,
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முஜீபுர் ரஹ்மான், அஸாத் சாலி ஆகியோர் அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் மாவனல்லை சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புள்ளவர்களை விடுவிக்க அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விஜேதாஸ ராஜபக்ஷவின் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட்ட உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் பதில் வழங்க கடிதம் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: