News Just In

3/18/2020 08:07:00 PM

மட்டு மாநகர சபையால் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் செயற்திட்டங்கள் துரிதகதியில்!!


(படங்கள்-சிவம்)
சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள வேளையில் இலங்கையிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு செல்கிறது. இதனால் பொது இடங்கள், காரியாலயங்கள் சுத்தப்படுத்தும் பணிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபையும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் கோரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் வைத்தியர்கள் குழு அடங்கிய கலந்துரையாடல் மாநகர சபையில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து துறை சார்ந்தவர்களின் ஆலோசனைக்கு அமைவாக முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் தலைமையில் மாநகர சுகாதாரப்  பிரிவிற்கு பொறுப்பான உறுப்பினர் சிவம் பாக்கியநாதனின் மேற்பார்வையில் மாநகரசபை மற்றும் மாநகர சபைக்கு உட்பட்ட சந்தை மற்றும் பல பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது.

சுத்தப்படுத்தலுக்கான முதல்கட்ட வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது, இச் செயற்திட்டத்தில் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் மட்டக்களப்பு மாநகர சபையால் பல வழிகளிலும் நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுக்காக்கும் பொருட்டு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. சிறுவர் பூங்கா உட்ப சில பொது இடங்களை தற்போது மக்கள் பாவிப்பதனை தடுப்பதற்காக பூட்டியுள்ளோம்,

அதனோடு பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை கொண்டு கூடவே நாங்களும் களத்தில் நின்று பல்வேறு வகையான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன், மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு பொது இடங்களையும் தொடர்ச்சியாக சுத்தப்படுத்தி வருவதுடன், ஊழியர்கள் உட்பட பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.










No comments: