News Just In

3/18/2020 06:38:00 PM

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்! இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு விடுமுறை!!

பொதுப்போக்குவரத்தின் ஊடாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதனை கருத்தில் கொண்டு இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் நாளையும், நாளை மறுதினமும் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுபடுத்தும் முகமாக இலங்கை அரசு இந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

இதன்படி , பொதுப் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் இரண்டு நாட்கள் விடுமுறை தொடர்பான உத்தரவினை இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகம் அனைத்து சாலைகளிற்கும் வழங்கியுள்ளது.

No comments: