News Just In

3/02/2020 08:00:00 AM

பாராளுமன்றம் இன்று கலைப்பு!!

பாராளுமன்ற கலைப்புக்கான வர்த்தமானியை ஜனாதிபதி இன்றைய தினம் நள்ளிரவு வெளியிடுவார் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்குரிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் இன்று நள்ளிரவு வெளியிடப்படக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

19ஆவது திருத்தச்சட்டத்தின்படி, ஜனாதிபதியால் நான்கரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். மேலும், நேற்றைய தினம் நள்ளிரவுக்குப் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், பாராளுமன்றத்தை கலைக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டு, இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சில திகதிகளை ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இதன்பிரகாரம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை தேர்தல் நடத்தப்படலாம் எனவும் தெரியவருகிறது.

No comments: