News Just In

3/29/2020 08:44:00 AM

கொரோனா தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவலை பரப்பியவர் கைது!!

கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளம் மூலம் பரப்பிய நபர் ஒருவர் நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, குருணாகல், உஹுமிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் தெஹிவளை, களுபோவில பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (29) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

No comments: