News Just In

3/29/2020 09:12:00 AM

இலங்கைக்கு வரும் பயணிகள் விமானங்களுக்கான தடைக்காலம் மேலும் நீடிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இலங்கைக்கு சர்வதேச நாடுகளிலிருந்து பயணிக்கும் சகல பயணிகள் விமானங்களையும் இம்மாதம் 31ஆம் திகதிவரை தரையிறங்க அனுமதிப்பதில்லை என இலங்கை சிவில் விமான சேவைகள் பணியகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளிலிருந்துவரும் பயணிகள் இலங்கைக்குள் வரமுடியாது என்ற பயணத்தடை இம்மாதம் 28ஆம் திகதி வரைவிதிக்கப்பட்டிருந்தது. குறித்த தடையானது நேற்று (28) முடிவடைந்த நிலையிலேயே அதன் கால எல்லை நீடிக்கப்பட்டடுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகள் தடைகளின்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த பயணிகள் தமது நாடுகளுக்கு செல்ல ஒரு நாளைக்கு ஆறு மணி நேர கால அவகாசமே விமான நிலையத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை ஊடாக செல்லும் விமானங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட மாட்டாது எனக் கூறியுள்ள சிவில் விமான சேவைகள் பணியகம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக தரையிறங்கும் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கும் விமானங்களுக்கு குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

No comments: