நான்காம் கட்ட தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 188 பேர் இன்று (27) தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் முகாம்களான கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 25 பேரும், புனானையில் மேலும் 163 பேரும் இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.
இன்று 443 பேரை வீடுகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும், இதுவரை 678 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, 46 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2,866 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்படுவதாக இராணுத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
3/27/2020 12:05:00 PM
இலங்கையில் 46 தனிமைப்படுத்தல் நிலையங்கள்! 188 பேர் வீடு திரும்பினர்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: