இலங்கையர் ஒருவர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக சுவிட்ஸர்லாந்தில் உயிரிழந்துள்ளார்.
59 வயதான ஆண் ஒருவரே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் 11,811 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 192 பேர் உயிரிழந்துள்ளனர். 111 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்ஸர்லாந்தில் குடியுரிமை பெற்றுள் அங்கு வசித்து வரும் 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்தவர் எனவும், சுவிட்சர்லாந்தின் புனித கலன் (Saint Gallen) பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேர்லினில் உள்ள இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
3/27/2020 11:22:00 AM
இலங்கையரொருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுவிஸில் உயிரிழப்பு!
Subscribe to:
Post Comments (Atom)


No comments: