News Just In

3/29/2020 07:55:00 AM

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 115ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பகுதி தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 65 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 09 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது இலங்கையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 105 ஆக உள்ளது. அதேவேளை மேலும் 199 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

No comments: