
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதால் மீன்பிடித் துறைமுகத்தினை துப்பரவு செய்யும் பணிகள் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர், வாழைச்சேனை பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச சபை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியோர் இணைந்து துறைமுகத்தினை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையின் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பிரேமரத்ன, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, செயலாளர் எஸ்.சிஹாப்தீன்;, வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், விசேட அதிரடிப் படையினர், சபை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை இடம்பெற்றதுடன், துறைமுகத்தின் வளாகம் துப்பரவு செய்யப்பட்டதுடன், மீன்கள் சேகரிக்கும் இடத்தினை நீர் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், மீனவர்களுக்கும், மீன்களை உண்ணும் பொதுமக்களுக்கும் நோய்கள் பாதிக்கப்படாத வகையில் வேலைத் திட்டங்கள் இடம்பெற்றது.
வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர், வாழைச்சேனை பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச சபை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியோர் பல்வேறு இடங்களில் துப்பரவு நடவடிக்கைகள் மற்றும் தொற்றுநீக்கி விசுறும் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் ஊடரங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீனவர்கள் சங்கங்கள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப் படகுகள் வெள்ளிக்கிழமை சென்றமை குறிப்பிடத்தக்கது.























No comments: