News Just In

2/20/2020 07:45:00 PM

பெண்ணொருவரை பலவந்தமாக கடத்தி பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்த சாரதி கைது!

பெண்ணொருவரை கடத்திச் சென்று பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான லொறி சாரதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆண்டிக்கம, கற்குழி பிரதேசத்தை சேர்ந்த குறித்த சாரதி, 32 வயதுடைய பெண்ணொருவரை பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தமை, தாக்கியமை மற்றும் அச்சுறுத்தியமை தொடர்பில்

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் தலைமறைவாகி இருந்த சாரதி கைது செய்யப்பட்டு சிலாபம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: