-நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப் படுவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அவ்வாறு மீள் நிர்ணயம் செய்யப்படவேண்டிய உள்ளூராட்சி கட்டமைப்புக்களை ஒரேயடியாக செய்யும் வரை மேற்படி இடைநிறுத்தம் அமுலுக்கு வருகிறது!
2018 ஆம் ஆண்டு மாகாணசபை உள்ளூராட்சி அமைச்சராக இருந்த அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை பரிசீலனைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தமாக
சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலில் ஒரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்தீர்மானத்தின் படி மக்களை குழம்பாமல் இருக்க செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சரவை தீர்மானம் முழுமையாக கிடைத்த பின்னர் அது சம்பந்தமான ஊடக சந்திப்பு விரைவில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனையும் நடைபெறுகிறது.
2/20/2020 08:08:00 PM
Home
/
அம்பாறை
/
உள்ளூர்
/
சாய்ந்தமருது
/
நகரசபை வர்த்தமானி ரத்து தொடர்பாக சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!
நகரசபை வர்த்தமானி ரத்து தொடர்பாக சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: