சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும் அதன் பயனை தற்போது மக்களுக்கு வழங்க இயலாது என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையின் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் பயனை தற்போது நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க முடியாது எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன , இடைக்கால அரசாங்கத்தில் எரிபொருள் மானிய அடிப்படையிலேயே விநியோகிக்கப்படுகின்றது என்றும் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கம் எரிபொருளின் விலை தொடர்பில் விலை நிர்ணய சூத்திரத்தை பின்பற்றியது அதனால் எவ்வித பயனும் நுகர்வோருக்கு கிடைக்ப்பெறவில்லை.
ஆனால் தற்போது அராங்கம் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் எரிபொருளை மானி அடிப்படையிலேயே வழங்குவதாகவும் இதன்போது அவர் கூறினார்.
2/20/2020 08:40:00 PM
Home
/
Unlabelled
/
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும் மக்களுக்கு வழங்க முடியாதுள்ளது!-அமைச்சரவை பேச்சாளர்
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும் மக்களுக்கு வழங்க முடியாதுள்ளது!-அமைச்சரவை பேச்சாளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: