News Just In

2/20/2020 07:20:00 PM

ஏறாவூரில் கிராமிய உட்கட்டமைப்பு திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகளைக் கையளிக்கும் நிகழ்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
ஏறாவூரில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளின் பேரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பல உள்ளக வீதிகளின் அபிவிருத்திகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் முதலமைச்சரின் வேண்டுகோளின் பிரகாரம், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்ட உள்ளக வீதிகளைக் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர்களான எஸ்.எம். ஜெமில், எம்.எஸ்.எம். றியாழ், நகர சபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் நாஸர், முன்னாள் உறுப்பினர் ஏ. அஸனார் ஆகியோருட்பட வட்டார பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளான ஏறாவூர் பள்ளியடி 1குறுக்கு வீதி, பள்ளியடி 2ம் குறுக்கு வீதி, பள்ளியடி சுபைதா குறுக்கு வீதி, சர்வோதய குறுக்கு வீதி, பள்ளியடி வீதி ஆகியவை கொங்ரீட் வீதியாக மாற்றப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மக்கள் முன் உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்துக்கான முதலமைச்சர் என்ற அதிகாரம் தனது கைகளுக்கு கிடைத்தபோது அவ்வதிகாரத்தை இனமத வேறுபாடின்றி பல்வேறுபட்ட அபிவிருத்திகளை மாகாணம் முழுவதும் செய்வித்ததாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை தனது முதலமைச்சர் என்கின்ற அதிகாரக் காலம் முடிவடைந்தபோதும் தனது சேவைகளை முடக்காமல் தனது சொந்த நிதியிலும் அரச நிதியிலும் அதே வேகத்துடன் மக்கள் தேவைகளை அடையாளம் கண்டு அதனைத் தற்போதும் நிவர்த்தி செய்து கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: