News Just In

2/07/2020 08:24:00 PM

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு வேலைத்திட்டத்தில் டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்களுக்கு வேலைவாய்ப்பு-ஜனாதிபதி

சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு உதவி உத்தியோகத்தர்களாக சேவையாற்றி தொழிலை இழந்துள்ளதாகக் கூறப்படுபவர்களை ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இன்று காலை முதல் டெங்கு ஒழிப்பு உதவி உத்தியோகத்தர்களாக சேவையாற்றி தொழிலை இழந்துள்ளதாகக் கூறப்படும் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்

ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்றுஅவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி
வெற்றிடங்கள் இன்றி பணியாளர்களை இணைத்துக்கொண்டால் இவ்வாறான பிரச்சினைகள் நேரும் என சுட்டிக்காட்டினார்.
தொழிலை இழந்தவர்கள் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும், ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளில் அவர்களை இணைத்துக்கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments: