இன்று மாலை ஆரையம்பதி ஒல்லிக்குளத்தில் உறவியினர் வீட்டுக்கு வருகை தந்து மீண்டும் சொந்த இடமான கல்முனை நோக்கி பயணித்த இரு குடும்பத்தை சேர்ந்த இரு பெண்களும் இரு ஆண்களுமாக-நால்வர் பயணித்த முச்சக்கர வண்டி மாட்டின் மீது மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
மாட்டின் மீது மோதிய முச்சக்கர வண்டி மூன்று தடவைகள் கரணம் அடித்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நால்வருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், அதில் பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கலவலைக்கிடமான நிலையில் உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இரவு 10 மணியளவில் நடந்த இவ் விபத்தில் பொதுமக்கள் உடன் அம்புலன்ஸ் வண்டிக்கு அழைத்து பாதிக்கப்பட்டவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments: