வட மாகாண மாணவர்களின்
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
பெறுபேறு தொடர்பான ஒரு பார்வை
(2015-2019)
(கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் இந்த கட்டுரையில் வரும் அட்டவணைகளின் புள்ளி விபரங்களை தெளிவாக அவதானிக்க screen rotation option ஐ பயன்படுத்தவும்)தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
பெறுபேறு தொடர்பான ஒரு பார்வை
(2015-2019)
01. அறிமுகம் :
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் வைக்கப்படுகின்றது. இருப்பினும் இது வேண்டாத ஒன்று என்று புறந்தள்ளிவிடமுடியாது. இப்பரீட்சையில் சித்தியடையும் வசதிகுன்றிய மாணவர்கள் அரசின் நிதி உதவியைப் பெறுவதுடன் பின்தங்கிய பிரதேசங்களில் வளப்பற்றாக்குறையுடன் கல்வி பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்புமிடத்து வசதியான பாடசாலைகளைத் தெரிவு செய்யவும் இதன் மூலம் வாய்ப்புண்டு.
மேலும் ஆரம்ப கல்வியைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் அடைவுமட்டத்தை மட்டிடவும் இப்பரீட்சை ஒரு அளவு கோலாக உள்ளதை மறுக்க முடியாது.
தேசிய ரீதியாக ஆண்டுதோறும் முந்நூறு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களில் ஏறத்தாழ 25% ஆனவர்கள் ஆரம்பக்கல்வியை திருப்திகரமாக பூர்த்தி செய்யாத நிலையை பரீட்சைப் பெறுபேறுகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.
இதிலும் தமிழ் மாணவர் பெறுபேறு மிகவும் பின்னடைந்து காணப்படுகின்றது. தமிழர் அதிகம் வாழும் பிரதேசங்களான வடக்கு , கிழக்கு மாகாண மாணவர் பெறுபேறு தேசிய ரீதியாக 8வது , 9வது இடங்களிலே காணப்படுகின்றது.
இரு வினாத்தாளிலும் 70 புள்ளிக்கு மேல் பெற்றவர்களின் வீதத்தை தேசிய ரீதியாக ஒப்பிட்டு நோக்கும் போது வடக்கு , கிழக்கு மாகாணப் பெறுபேறு பின்னடைந்தே காணப்படுகின்றது.
உள்நாட்டு யுத்தம் நிலவிய காலப்பகுதியில் தேசிய ரீதியாக 4வது , 5வது இடங்களில் காணப்பட்ட தமிழ் மாகாண பெறுபேறு தற்போது பின்னடைந்து செல்வதன் காரணிகள் என்ன? இது பற்றி தமிழ் சமூகம் கண்டுகொள்ளாதது ஏன் என்ற வினாக்கள் எழுகின்றன!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தினால் ஆண்டுக்கு ஆண்டு வெளியிடப்படும் அறிக்கைகளின் பிரகாரம் வடமாகாண பெறுபேறுகளை சற்று அவதானிப்போம்.
ஒரு கட்டிடத்திற்கு அதன் அத்திவாரத்தின் உறுதி எத்துணை பலம் வாய்ந்ததாக இருக்கவேண்டுமோ அத்துணை பலம் வாய்ந்தது ஆரம்ப பிரிவு மாணவர்களின் அடைவுமட்டம்.
2015 தொடக்கம் 2019 வரையிலான 5 வருடக் காலப்பகுதியில் வட மாகாணத்தின் மாகாண , மாவட்ட , வலய ரீதியாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 70 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொடர்பான விபரங்களை அவதானிப்போம்.

02. மாகாண ரீதியான பெறுபேறு-வட மாகாணம் :
தேசிய ரீதியாக நோக்கும் போது வட மாகாண பெறுபேறு ஒன்பது மாகாணங்களில் 8ம் இடத்தைப் பெறுகிறது. மேலும் ஆண்டுதோறும் 70 புள்ளிக்கு மேல் தேசிய ரீதியாக பெறும் வீதத்திலும் பார்க்க வடமாகாண பேறு குறைந்தே காணப்படுகின்றது.
03. மாவட்ட ரீதியான பெறுபேறு :
மாவட்ட ரீதியான பெறுபேறுகளின் அடிப்படையில் கீழ்வரும் அட்டவணை தொகுக்கப்பட்டு உள்ளது. தேசிய ரீதியான 25 மாவட்டங்களில் வட மாகாணத்தில் உள்ள எந்த மாவட்டமும் முதல் 15 நிலைக்குள் காணப்படவில்லை.

தேசிய ரீதியாக நோக்கும் போது குருநாகல் மாவட்டம் தொடர்ந்து முதல் நிலையிலேயே காணப்படுகின்றது. புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறும் மாணவர் வீதம் யாழ் மாவட்டம் , வவுனியா மாவட்டத்தில் ஓரளவு சிறப்பாக காணப்படுகின்றது.
ஆனால் ஆரம்பப்பிரிவு கல்வியை திருப்திகரமாக நிறைவேற்றியோர் தொடர்பாக தேசிய பெறுபேற்றுடன் ஒப்பிடும் போது யாழ் , வவுனியா மாவட்டங்களின் பெறுபேறு குறைந்தே காணப்படுகிறது.
03. (a) யாழ்ப்பாண மாவட்ட பெறுபேறு :
தொடர்ச்சியாக முதல் நிலையில் காணப்படும் குருநாகல் மாவட்ட பெறுபேற்றுடன் ஒப்பிடும்போது யாழ் மாவட்ட பெறுபேறு ஏறத்தாழ 10% குறைவாகவே உள்ளது.03. (a) யாழ்ப்பாண மாவட்ட பெறுபேறு :
03. (b) கிளிநொச்சி மாவட்ட பெறுபேறு :
04. வலய ரீதியான பெறுபேறு :
வட மாகாணத்தில் காணப்படும் 12 கல்வி வலயங்களில் 11 கல்வி வலயங்களே தமிழ் வலயங்களாகும். தேசிய ரீதியான 99 கல்வி வலயங்களில் யாழ் கல்வி வலயப் பெறுபேறு 30 ஐ அண்மித்த நிலையில் காணப்படுகிறது. ஏனைய கல்வி வலயங்கள் மிக பின்னடைவான நிலையிலே உள்ளன.
புலமைப்பரிசிலில் சித்திபெறும் மாணவர் வீதம் யாழ் கல்வி வலயத்தில் அதிகமாக உள்ளபோதிலும் 70 புள்ளிக்கு மேல் பெறும் யாழ் மாணவர் வீதம் நிக்கவரட்டிய கல்வி வலயத்துடன் ஒப்பிடும் போது ஏறத்தாழ 10% குறைவாகும்.
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் சிறப்பான பெறுபேறுகளைக் காட்டிய வடக்கு , கிழக்கு மாகாணங்கள் தற்போது மிகப் பின்னடைந்துள்ளது. வீதிக்கு வீதி பிரத்தியேக கல்வி நிலையங்களை மாதிரி பரீட்சை வினாத்தாள்கள், கல்விக்கட்டணம் என அதிகரித்தபோதும் பெறுபேறுகள் அதிகரிக்கவில்லை. இதுபற்றி மாகாண கல்வித் திணைக்களமோ அல்லது வலயக்கல்வி திணைக்களமோ பரிகாரம் காண முற்பட்டதாக தெரியவில்லை.
சிறந்த பெறுபேறுகளை பெறும் சில மாணவர்களை முன்னிறுத்திக் காட்டி அதனுள் குறைகளை மூடி மறைக்கும் நிலையே ஊடகங்கள் செய்கின்றன. அடிப்படைக்கல்வியில் தேர்ச்சிபெறாமல் விடுவதன் மூலம் இவர்கள் எழுத , வாசிக்க தெரியாமல் ஆரம்பத்திலேயே கருகிப்போகும் மாணவர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை.
தடையற்ற வகுப்பேற்றத்தின்மூலம் வகுப்பேற்றப்படும் மாணவர்கள் இடைநிலைக் கல்வியைத் தொடர முடியாமல் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விடும் நிலையும் வடக்கு , கிழக்கில் அதிகரிக்கிறது.

04. (a) யாழ்ப்பாண கல்வி வலயப் பெறுபேறு:
04. (c) வவுனியா தெற்கு கல்வி வலயப் பெறுபேறு :
04. (d) மன்னார் கல்வி வலயப் பெறுபேறு :
04. (e) முல்லைத்தீவு கல்வி வலயப் பெறுபேறு :
04. (h) கிளிநொச்சி கல்வி வலயப் பெறுபேறு :
04. (k) தென்மராட்சி கல்வி வலயப் பெறுபேறு :
04. (l) தீவகம் கல்வி வலயப் பெறுபேறு :
ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களில் ஏறத்தாழ 5% ஆன மாணவர்கள் பல்வேறு காரணிகளால் தேசிய ரீதியாக இடைவிலகல் அடைவதாக அறிய முடிகிறது. எனினும் கிழக்கு மாகாணத்தில் இது 10% ஆக காணப்படுகின்றது. வட மாகாணத்தில் 2009 க்கு பின்னர் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் காரணமாக இடைவிலகல் அடையும் மாணவர்கள் வீதத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.வட மாகாணத்தின் வலய ரீதியான பெறுபேற்றை தேசிய ரீதியாக நோக்கும் போது யாழ் கல்வி வலயம் , தென்மராட்சி கல்வி வலயம் , வடமராட்சி கல்வி வலயப் பெறுபேறுகள் ஓரளவு ஆரோக்கியமாக உள்ளன. ஏனைய கல்வி வலயங்களின் பெறுபேறுகள் திருப்திகரமாக தற்போது காணப்படவில்லை. எதிர் காலத்திலாவது இக் கல்வி வலயங்களில் ஆரம்பக் கல்வியை திருப்திகரமாக நிறைவேற்றுவோரின் வீதம் அதிகரிக்கப்படுமா என்ற ஆதங்கமே என்னுள் மேலோங்கி காணப்படுகின்றது.
(தொகுப்பு-ஸ்ரீ கிருஷ்னர்)

No comments: