
ஒன்றுகூடுவோம்- இலங்கை நிறுவனத்தின் (Srilanka Unites) 08 ஆவது நல்லிணக்க நிலையம் இன்று(09) மட்டக்களப்பு-மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக Global Unites இன் ஸ்தாபகரும் ஒன்றுகூடுவோம்-இலங்கை தலைவருமான Prasan De Visser, ஒன்றுகூடுவோம்-இலங்கையின் மாகாண இணைப்பாளரும் கல்முனை நல்லிணக்க நிலையத்தின் முகாமையாளருமான சினான் உதுமாலெப்பை,
ஒன்றுகூடுவோம்-இலங்கை மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற கல்வி அமைச்சருமான ம.சுரேஸ்காந்தன், Dream Space Academy முகாமையாளர் ந.கிசோத், இளைஞர் கழகங்களின் மாவட்ட சம்மேளனத் தலைவர் ம.பிரியங்கன் ஆகியோரும் இளைஞர் யுவதிகள், கிராம மக்கள் மற்றும் கல்முனை நல்லிணக்க நிலைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிறுவனமானது சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துவருவதுடன், இளைஞர்களை வலுவூட்டும் செயற்பாட்டையும் நாடு பூராக மேற்கொண்டு வருகிறது.
அத்துடன் ஆங்கிலம், சிங்களம், கணனி கற்கை, முயற்சியாண்மை, போன்ற கற்கைநெறிகளையும் ஒன்றுகூடுவோம்-இலங்கை நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















No comments: