News Just In

2/17/2020 10:24:00 PM

மட்டக்களப்பில் இடம்பெற்ற JKMO கராத்தே அமைப்பின் விருது வழங்கும் நிகழ்வு


ஜப்பான் கராத்தே மருயோசிக்காய் அமைப்பின் (JKMO) அமைப்பின் விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பாடும் மீன் ஓய்வு விடுதியில், கிழக்கு மாகாண JKMO அமைப்பின் தலைவரும், பிரதான பயிறுவிப்பாளருமான சிகான். எந்திரி.எஸ்.முருகேந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் முதல்வர் K.புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்பரன், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) V.லவக்குமார் ஆகியோரும்

கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலை, மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி, புதுக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டனர்.

சிறப்பாக நடந்த இந் நிகழ்வில், அதிதிகள் வரவேற்பு, கலை நிகழ்வுகள், கவிதை, அதிதிகள் உரை, சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு, அதிதிகள் கௌரவிப்பு போன்றன இடம்பெற்றன.




































No comments: