இயற்கையில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் எதிர்கால சமூகத்தினை கொண்டுசெல்லும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் மியோவாக்கி என்னும் விஞ்ஞானியினால் முன்னெடுக்கப்பட்ட காடு வளர்ப்பு திட்டத்தினை அடிப்படியாக கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் நேற்று (17.02.2020) நடைபெற்ற இந்த நிகழ்வில் சூழலுக்கு பாதுகாப்பினை அளிக்கும் பல்வேறு மரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் நடப்பட்டது.
குறுகிய நிலப்பரப்பிற்குள் அடந்த காட்டினை உருவாக்கும் வகையிலேயே இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.















No comments: