News Just In

2/17/2020 09:00:00 PM

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா இன்று (17) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி.எம்.நவரூபரஞ்சினி அவர்களும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) எம்.லவக்குமார், நெஸ்லே நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் உயரதிகாரி என்.முத்துக்குமார் ஆகியோரும்

விசேட விருந்தினர்களாக புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான திருமதி.A.பீற்றர், திருமதி.J.ராமலிங்கம் ஆகியோருடன்

பிள்ளைகளின் பெற்றோர்கள், கல்லூரியின் நலன் விரும்பிகள், பிள்ளைகள் என பெரும்பாலானோர் இந்த சிறுவர் விளையாட்டு விழா கலந்து கொண்டனர்.













No comments: