ஏறாவூரின் முதலாவது ஹிப்ழ் மதரசாவான குல்லிய்யது தாரில் உலூம் (அறிவு இல்லம்) கலாசாலையின் பட்டமளிப்பு, புனித அல்குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கான பரிசளிப்பு. கௌரவிப்பு ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (28.02.2020) இடம்பெறும் என்று கலாசாலை நிருவாகம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு காட்டுப்பள்ளி வீதி ஜாமியுல் அக்பர் பள்ளியிலிருந்து ஊர்வலத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி கலாசாலை வளாகத்தைச் சென்றடைந்ததும் ஏனைய நிகழ்வுகள் இடம்பெறும்.
இக்கலாசாலையின் பழைய மாணவர் ஒன்றியத் தலைவர் ரீ.எல்.எம். தன்ஸீல் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இக்கலாசாலையின் ஸ்தாபகரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தின் ஆலிம் நஸீர் அஹமட் கலந்து கொள்வதுடன்,
கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவரும் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் உப அதிபருமான அஷ்ஷெய்க் எஸ்.எம். அலியார் ஹஸரத் அவர்களும் விஷேட அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களயத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம். அன்வர் அலியும் இன்னும் மார்க்க அறிஞர்களும் கலந்து கொள்கின்றனர்.
No comments: