கொரோனா-வைரஸ் தீவிரமாகப் பரவி உச்சத்தைத் தொடும் பட்சத்தில், அதனை சமாளிக்க உலக நாடுகள் கூடுதலாக பாடுபட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வைரஸ் உலகின் எந்தவொரு பாகத்திலும் மனிதரில் இருந்து மனிதருக்கும் தொற்றும் 'பென்டமிக்' என்ற நிலையை அடைந்து விட்டதென இப்போதைக்குப் பிரகடனம் செய்ய முடியாது. இருந்தபோதிலும், இதனை சமாளிக்க உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் புதிய ரக கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின், காற்று, நீரின் மேற்பரப்பு, குறிப்பாக குடிநீர் உள்ளிட்டவற்றின் மீதான உயிரினச் சுற்றுச்சூழல் தரக் கண்காணிப்புப் பணியைச் சீன உயிரினச் சுற்றுச்சூழல் துறை கண்டிப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை, சீனாவைச் சேர்ந்த 337 மாவட்டங்கள் மற்றும் மாவட்ட நிலைக்கு மேற்பட்ட நகரங்களில் சிறந்த காற்றுடைய நாட்களின் விகிதம் 87.1 சதவீதத்தை எட்டியுள்ளதைக் காற்று தானியங்கிக் கண்காணிப்பு முடிவு காட்டுகிறது.
நீரின் மேற்பரப்பு நிலை கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததற்குச் சமாகும் என்பதை 1601 தேசிய நிலை தானியங்கி வசதிகளின் கண்காணிப்பு முடிவு காட்டியுள்ளது. இத்தொற்று நோய், குடிநீருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறி கண்டறியப்படவில்லை.
சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய கொவிட்-19 நோய், பல நாடுகளில் பரவியுள்ளது. சீனாவிற்கு அப்பால் தென்கொரியா, இத்தாலி, ஈரான் ஆகியவற்றின் வரிசையில், பஹ்ரேனிலும், குவைத்திலும் கொரோனா தொற்றிய நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இந்த நோய் சீனாவில் 77ஆயிரம் பேரைத் தொற்றியுள்ளதுடன், இங்கு சுமார் இரண்டாயிரத்து 600 பேர் வரை பலியாகியுள்ளனர். சீனாவிற்கு அப்பால், 30 நாடுகளில் ஆயிரத்து 200 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 20இற்கு மேற்பட்ட இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக ஞாயிற்றுக்கிழமை உயர்ந்துள்ளது. இதுவரை சீனா முழுவதும் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76,936 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 123 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் 79 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். அதுபோன்று ஈரானிலும் கொவிட்-19 பாதிப்பால் 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 28 நாடுகளில் 'கொவிட்-19' வைரஸுக்கு (கொரோனா வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500ஆக அதிகரித்து காணப்படுகிறது.
2/25/2020 10:48:00 AM
கொரோனா வைரஸ் கொள்ளை நோயாக மாறினால்...? உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: