நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹொரணை- இரத்தினபுரி வீதியின் இலிம்ப பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு இலக்கான 32 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2/25/2020 11:30:00 AM
துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் பலி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: