News Just In

2/25/2020 12:30:00 PM

நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடம் திறந்துவைப்பு

-அபு ஹின்சா-
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிமின் முயற்சியின் பயனாக கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் கமு /அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையின் 1500 இருக்கைகளை கொண்டதாக சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடம் திறந்து வைக்கும் நிகழ்வும், புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று (24) இடம்பெற்றது.

அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.கபூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கேட்போர் கூடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், பிரதி கல்வி பணிப்பாளர், உதவி கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் சங்கத்தினர் , பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments: